Enable Javscript for better performance
உலக புத்தகத் தின விழா போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    உலக புத்தகத் தின விழாவையொட்டி, வால்பாறை கிளை நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.
    உலகப் புத்தகத் தினம் ஏப்ரல் 23-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் அரசுப் பொது நூலகத் துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
    அதன்படி, வால்பாறை கிளை நூலகத்தில் நூலகர் அ.வேலுசாமி தலைமையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் க.சிவன்ராஜ் திங்கள்கிழமை போட்டியைத் தொடக்கி வைத்தார்.
    இதில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
    மேலும், போட்டிகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் கோவையில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai