Enable Javscript for better performance
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    நெகமம் அருகே கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
    நெகமத்தை அடுத்த வஞ்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (50). இவரது மனைவி மரகதம் (44). விசைத்தறித் தொழிலாளிகளான இவர்களுக்குக் குழந்தை இல்லை.
    ஈஸ்வரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். கணவர் இறந்த துக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட மரகதம் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சாணி பவுடர் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
    அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து, நெகமம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai