Enable Javscript for better performance
கராத்தே பயிற்சி முடித்த அரசுப் பள்ளி மாணவிகளுக்குச் சான்றிதழ்- Dinamani

சுடச்சுட

    

    கராத்தே பயிற்சி முடித்த அரசுப் பள்ளி மாணவிகளுக்குச் சான்றிதழ்

    By DIN  |   Published on : 18th April 2017 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கராத்தே பயிற்சி முடித்த மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கும் விழா கோவை, இடையர்பாளையத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
    தமிழக பள்ளிக் கல்வித் துறையின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலமாகப் பெண் கல்வித் திட்டத்தின்கீழ், மாணவிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ள 6 மாத கால அடிப்படை கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.
    அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், இடையர்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 50 மாணவிகளுக்கு கோவையில் உள்ள "க்யோ குஷின்' கராத்தே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் பி.ரவிகுமார், எஸ்.சண்முகம், கே.ராஜ்குமார் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    பயிற்சி நிறைவடைந்ததையடுத்து நடைபெற்ற நிறைவுவிழாவுக்கு எஸ்.எஸ்.ஏ. வட்டார வளமைய மேற்பார்வையாளர் தா.பிளாரன்ஸ் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் த.இரா.அனந்தலட்சுமி முன்னிலை வகித்தார். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்.தன்ராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
    மேலும், சிறந்த மாணவிகளாகத் தேர்வு செய்யப்பட்ட எஸ்.தாரணி, எஸ்.சுகந்தி, கே.சரஸ்வதி ஆகியோருக்கும் அவர் கோப்பைகளை வழங்கிப் பாராட்டினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மா.வடிவேல் நன்றி கூறினார். விழாவில், எஸ்.எஸ்.ஏ. தொழில்நுட்ப அலுவலர் ஜனார்த்தனன், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai