Enable Javscript for better performance
திருப்பூர் நகராட்சி முன்னாள் ஆணையர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளர் நீதிமன்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பூர் நகராட்சி முன்னாள் ஆணையர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: தமிழக உள்துறைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

    By DIN  |   Published on : 18th April 2017 07:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பூர் நகராட்சி முன்னாள் ஆணையர் பாலசந்திரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி கோவை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
    திருப்பூர் நகராட்சி ஆணையராக 2002-இல் பதவி வகித்தவர் பாலசந்திரன். இவர், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பாலசந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர்.
    இந்தச் சோதனையில், வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 46 லட்சம் சொத்து சேர்த்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பாலசந்திரன் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக அப்போதைய தமிழக நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த நிரஞ்சன் மார்டியிடம் அனுமதி கேட்டனர்.
     இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகவும் அவர் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு கோவை லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக தற்போதைய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி திங்கள்கிழமை நேரில் ஆஜராகி நீதிபதி (பொறுப்பு) கே.ஆர்.மதுரசேகரனிடம் சாட்சியம் அளித்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai