திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
By DIN | Published on : 18th April 2017 07:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனத்தில் நடைபெற்று வந்த கிராமப்புற மகளிருக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனம், எல் அண்டு டி பொதுநல அறக்கட்டளை இணைந்து நடத்திய கிராமப்புற மகளிருக்கான திறன் மேம்பாடு குறித்த பயிற்சி முகாம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பயிற்சி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் துணை இயக்குநர் அ.ஜோதிமணி பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து, பயிற்சி முடித்தவர்களுக்கு வங்கிக் கடன் பெறுவது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், அவினாசிலிங்கம் மக்கள் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் உமா சங்கர், மாவட்டத் தொழில் மையத்தின் உதவிப் பொறியாளர் ஆஷா தேவி, எல் அண்டு டி பொது நல அறக்கட்டளையின் நிர்வாகி சுகராஜா, திட்ட அலுவலர் சூரியகலா, உதவித் திட்ட அலுவலர் சுரேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.