Enable Javscript for better performance
பழைய ஆயக்கட்டுப் பாசனத்துக்கு 13 நாள்கள் தண்ணீர் திறக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    பழைய ஆயக்கட்டுப் பாசனத்துக்கு 13 நாள்கள் தண்ணீர் திறக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 18th April 2017 07:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழைய ஆயக்கட்டுப் பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கவேண்டும் என திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
      பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.  இதில், பொள்ளாச்சி நகர மதிமுக சார்பில் வழங்கப்பட்ட மனு விவரம்:
     கடந்த செப்டம்பர் மாதம் பரம்பிக்குளத்தில் நடைபெற்ற தடியடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமிழகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீதும், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும், வேட்டைக்காரன்புதூரில் செயல்பட்டு வரும் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் முகாம் அலுவலகங்களை பரம்பிக்குளத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
     விவசாயிகள் சார்பில் அளிக்கப்பட்ட மனு:   ஆழியாறு, பழைய ஆயக்கட்டுப் பாசனக் கால்வாய்களுக்கு நீண்ட காலப் பயிர்களைக் காப்பாற்ற தொடர்ந்து 13 நாள்களுக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்.  இதற்கான உயர்நீதி மன்ற உத்தரவு இருந்தும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் 5 நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் வழங்கமுடியும் என கூறி வருகின்றனர். எனவே, பழைய ஆயக்கட்டுப் பாசனக் கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai