Enable Javscript for better performance
பிளாக்தண்டரில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மேஜிக் திரையரங்கு துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பிளாக்தண்டரில் நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப மேஜிக் திரையரங்கு துவக்கம்

    By DIN  |   Published on : 18th April 2017 07:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையம் - உதகை சாலையிலுள்ள பிளாக்தண்டர் கேளிக்கைப் பூங்காவில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேஜிக் திரையரங்கின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    பூங்காவின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் மேஜிக் டிஜிட்டல் திரையரங்கைத் தொடக்கி வைத்தார். பூங்கா இயக்கத் தலைவர் ரபேல் முன்னிலை வகிக்க, பூங்கா பொது மேலாளர் கர்னல் (ஓய்வு) கே.வி பால் வரவேற்றார்.
    டிஜிட்டல் திரையரங்கைத் திறந்துவைத்து பூங்கா செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் பேசியதாவது: மேஜிக் திரையரங்கில் ஒளிபரப்பாகும் திரைப்படக் காட்சிக்கேற்ப நம் இருக்கையும் பல திசைகளில் நகரும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதால், படத்தில் வரும் காற்று, மின்னல், சூறாவளி, பனிப்பொழிவு போன்ற உணர்வுகளை நாம் நேரடியாக காண்பது போன்ற இன்பத்தை அனுபவிக்க முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai