Enable Javscript for better performance
ரயிலில் இளம் பெண்ணிடம் தகராறு: இரு இளைஞர்களிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ரயிலில் இளம் பெண்ணிடம் தகராறு: இரு இளைஞர்களிடம் விசாரணை

    By DIN  |   Published on : 18th April 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எர்ணாகுளம்-சென்னை ரயிலில் இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாக கேரள இளைஞர்கள் இருவரிடம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
    இதுகுறித்து ரயில்வே காவல் துறையினர் கூறியதாவது:
    கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் இருந்து சென்னைக்கு சுவிதா அதிவிரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது. அந்த ரயிலில் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது பெண் பயணம் செய்துள்ளார். அப்போது, அவரது இருக்கைக்கு எதிரே இரு இளைஞர்கள் பயணம் செய்தனர்.
    இந்நிலையில், ரயில் பாலக்காடு அருகே வந்து கொண்டிருந்தபோது, இரு இளைஞர்களும் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் ஈடுபட முயன்றனராம். அந்தப் பெண்ணின் அலறலைக் கேட்டு சக பயணிகள், அந்த இரு இளைஞர்களையும் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து கோவை ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் ரயில்வே போலீஸார்  விசாரணை நடத்தினர். அதில், அவர்கள், கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்த ராகுல் விஸ்வநாத் (29), வினு (27) என்பதும், மருந்து விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற இடம் பாலக்காடு ரயில்வே எல்லைக்குள் வருவதால், அவர்கள், இருவரையும் பாலக்காடு ரயில்வே காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai