Enable Javscript for better performance
வனத்துக்குள் செல்ல மறுக்கும் குட்டி யானை- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், காரமடை அருகே பிடிபட்டு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வரகளியாறு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட யானை மீண்டும் வனத்துக்குள் செல்ல மறுத்து வருகிறது.
    கோவை, மாங்கரை வனப் பகுதியில் வாயில் புண்ணுடன் சுற்றித் திரிந்த 4 வயதான குட்டி யானையை வனத் துறையினர் மீட்டு, சாடிவயல் யானைகள் முகாமில் சிகிச்சை அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து, குணமடைந்த அந்தக் குட்டி யானையை, காரமடையை அடுத்த சொரண்டை வனப் பகுதியில் வனத் துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கொண்டு விட்டனர். இந்நிலையில், அந்தக் குட்டி யானை வனத்திலிருந்து வெளியேறி, காரமடையை அடுத்த வெள்ளியங்காடு பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தது. இதையடுத்து, அந்தக் குட்டி யானையை வனத் துறையினர் பிடித்து பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் உள்ள வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர்.
    அங்கு அந்தக் குட்டி யானை, திங்கள்கிழமை மதியம் வரை வனத் துறையினரின் கண்காணிப்பில் இருந்தது. பிறகு, அந்த யானையை வனப் பகுதிக்குள் கொண்டுசென்றுவிட பலமுறை முயற்சித்தும், அது வனத்துக்குள் செல்லவில்லை. அந்த யானை வரகளியாறு யானைகள் முகாம் அருகிலேயே நின்று வருவதால் அதற்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த யானையை, வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    இதுகுறித்து உலாந்தி வனச் சரகர் கிருஷ்ணசாமி கூறுகையில், குட்டி யானை வனப் பகுதிக்குள் செல்லத் தயக்கம் காட்டுகிறது. தொடர்ந்து இரண்டு நாள்கள் கண்காணிப்புக்குப் பிறகு வனப் பகுதிக்குள் விடுவதா அல்லது முகாமில் பராமரிப்பதா என்பது குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai