வால்பாறையில் பலத்த மழை: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published on : 18th April 2017 07:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வால்பாறை வட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த ஒரு வார காலமாக வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. கடும் வறட்சி நிலவி வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென இடியுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
அப்போது வீசிய பலத்த காற்றில் மானாம்பள்ளி, உருளிக்கல், வறட்டுப்பாறை ஆகிய எஸ்டேட் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இதில், மானாம்பள்ளி எஸ்டேட் சாலையில் விழுந்த பெரிய மரத்தை அப்புறப்படுத்தும் பணி திங்கள்கிழமை காலை 8 மணி வரை நடைபெற்றது. இதனால், அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல மற்ற பகுதிகளில் விழுந்த மரங்களும் திங்கள்கிழமை அதிகாலையில் அப்புறப்படுத்தப்பட்டன.