Enable Javscript for better performance
விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்:  பேச்சுவார்த்தைஏப்ரல் 24-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்:  பேச்சுவார்த்தை ஏப்ரல் 24-க்கு ஒத்திவைப்பு

    By DIN  |   Published on : 18th April 2017 07:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விசைத்தறி உரிமையாளர்கள் கூலி தொடர்பாக திங்கள்கிழமை நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    ஒப்பந்தப்படி, ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி வழங்க வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனால், இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 1.25 லட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால், துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் திங்கள்கிழமை முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    இதில், விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர் நலத் துறையினர் கலந்து கொண்டனர். ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் இருந்து யாரும் பங்கேற்கவில்லை. இதையடுத்து, கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குப் பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.    

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai