Enable Javscript for better performance
ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 19th April 2017 08:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆயுர்வேத மருத்துவமனைகள் அமைப்பதற்கு மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை என மத்திய ஆயுர்வேதத் துறை அமைச்சர் ஸ்ரீபாத் யெசோநாயக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
    பொள்ளாச்சியை அடுத்த பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியின் நிகழ்ச்சி, பாஜக ஊழியர்கள் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ள மத்திய ஆயுர்வேதத் துறை அமைச்சர்  ஸ்ரீபாத் யெசோநாயக் பொள்ளாச்சிக்கு திங்கள்கிழமை வருகை தந்தார்.  
    அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஏழை, நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்பு சாலை, மின்சார வசதி இல்லாத 80 ஆயிரம் கிராமங்கள் இருந்தன. தற்போது, 12 ஆயிரம் கிராமங்களுக்கு சாலை, மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஜன்தன் திட்டத்தின்கீழ், வங்கிக் கணக்குகளில் ரூ. 64 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகள் மூலம் நாட்டு மக்களுக்கு அரசின் மானியம், நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதால் மக்களுக்கு முழுபயன் கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு ஆயுர்வேத மருத்துவமனை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த மருத்துவமனைகள் அமைக்க மாநில அரசுகள் ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனைக்கும், பாஜகவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றார்.
    பேட்டியின்போது, கோவை தெற்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், பொதுச் செயலாளர் ரகுநாதன், மாவட்டச் செயலாளர் பாலு, மாநில செயற்குழு உறுப்பினர் பாபா ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
    இதைத் தொடர்ந்து, பொள்ளாச்சி பொறியியல் கல்லூரியில் மின்னனு பரிவர்த்தனை குறித்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஸ்ரீபத் யசோநாயக் கலந்து கொண்டு பேசினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai