Enable Javscript for better performance
உழவர் சந்தையில் கடைகளை அடைத்து விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, கோவை உழவர் சந்தையில் கடைகளை அடைத்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினர்.
    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய கோரியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தில்லியில் 38 நாள்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் உள்ள ஆர்.எஸ்.புரம், வடவள்ளி உழவர் சந்தைகளில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை முன்பாக ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, தில்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai