Enable Javscript for better performance
ஏப்ரல் 25-இல் நடைபெறும் வேலை நிறுத்தத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு- Dinamani

சுடச்சுட

    

    ஏப்ரல் 25-இல் நடைபெறும் வேலை நிறுத்தத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரவு

    By DIN  |   Published on : 19th April 2017 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலை நிறுத்தத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.
    கோவை காட்டூரில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஏஐடியூசி சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
    இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தத்துக்கு அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளது.
    கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஏப்ரல் 21-ஆம் தேதி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில், சிஐடியூ மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம், பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியூ போக்குவரத்து சங்கத் தலைவர் ப.காளியப்பன், ஏஐடியூசி சார்பில் கே.ஜி.ஜெகநாதன், சி.தங்கவேல், பூபதி எல்பிஎப் சார்பில் மணி, திருவேங்கடம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ஆட்டோக்கள் இயங்காது: அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் பூ மார்க்கெட் சிஐடியூ ஆட்டோ சங்க அலுவலகத்தில் கூட்டுக் தலைவரும், சிஐடியூ ஆட்டோ சங்கப் பொதுச் செயலாளருமான பி.கே.சுகுமார் தலைமையில் நடைபெற்றது.
      இதில், ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் அனைத்து ஆட்டோ தொழிலாளர்களும் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai