Enable Javscript for better performance
கோவையில் மூன்று வீடுகளில் தொடர் தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    கோவை புலியகுளம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று வீடுகளில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
    புலியகுளம் காவல் நிலையம் அருகே உள்ள பஜார் வீதியில் ஒரு வீட்டில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்படி, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும், இந்தத் தீ அடுத்தடுத்த இரண்டு வீடுகளுக்கும் பரவியது. இதில், அந்த வீடுகளில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்புத் துறையினர் நடத்திய விசாரணையில் மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்காலம் என்றனர். இதுகுறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஜீப் சேதம்: கோவை செல்வபுரம் சிவாலயா திரையரங்கம் அருகே உள்ள சத்துணவுக் கூடம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவலின்படி, சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai