Enable Javscript for better performance
டிராக்டருடன் கிணற்றில் விழுந்த விவசாயி சாவு- Dinamani

சுடச்சுட

    

    நெகமம் அருகே, டிராக்டருடன் கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழந்தார்.
    நெகமத்தை அடுத்த என்.சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (28). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் தென்னந்தோப்பு உள்ளது. தற்போது, வறட்சி நிலவி வருவதால் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றி வந்துள்ளார்.
    இந்நிலையில், பொள்ளாச்சியிலிருந்து தனது டிராக்டரில் தண்ணீர் வாங்கிச் சென்று தோட்டத்துக் கிணற்றில் ஊற்ற முயன்றுள்ளார்.
    தண்ணீரைக் கிணற்றில் ஊற்றுவதற்காக டிராக்டரை கிணற்றின் அருகே கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.  இதில், பாலசுப்ரமணியம் உயிரிழந்தார்.
    இதுகுறித்து நெகமம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai