Enable Javscript for better performance
நகை கொள்ளை வழக்கு: கைது செய்யப்பட்ட மூவரையும்3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    நகை கொள்ளை வழக்கு: கைது செய்யப்பட்ட மூவரையும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

    By DIN  |   Published on : 19th April 2017 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை நகைக் கடையில் 4.250 கிலோ நகைகளைக் கொள்ளை அடித்துச் சென்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் மூன்று நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
    கோவை, ராஜ வீதியில் சந்திரசேகர் (47) என்பவருக்குச் சொந்தமான நகைக் கடை உள்ளது. இவரது கடைக்குள், அவரது கார் ஓட்டுநர் ரியாசுதீன் உள்பட மூன்று பேர் கடந்த மார்ச் 2-ஆம் தேதி நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த இரு பெண் ஊழியர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டி கடையில் இருந்த 4.250 கிலோ நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இதுகுறித்து வி.ஹெச்.சாலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
    இந்நிலையில், கடந்த மார்ச் 6-ஆம் தேதி, பெங்களூரில் இருந்து தமிழகம் நோக்கி வந்த பேருந்தை ஆசனூர் மதுவிலக்குப் போலீஸார் சோதனையிட்டனர். இந்தச் சோதனையில் சந்தேகத்தின்பேரில், மூவரைப் பிடித்த போலீஸார் அவர்களிடமிருந்து ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 1.4 கிலோ நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
    விசாரணையில், அவர்கள், கோவை நகைக் கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய உக்கடம், ஜி.எம்.நகரைச் சேர்ந்த ரியாசுதீன் (28), அசாருதீன் (28), விஜயகுமார் (26) என்பது தெரியவந்தது. பின்னர், அவர்களை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 2.5 கிலோ நகைகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    இந்நிலையில், அவர்கள் கோவா, மங்களூர் போன்ற பல்வேறு பகுதிகளில் தலைமறைவாக சுற்றியபோது, விற்பனை செய்த நகைகளை மீட்க வேண்டிருந்ததால், மூவரையும் போலீஸ் காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
    இந்த மனுவை விசாரித்த நீதித் துறை நடுவர் நீதிமன்ற (எண்-5)மாஜிஸ்திரேட் செல்வகுமார் ஏப்ரல் 21-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai