Enable Javscript for better performance
பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கோடைக் கால பயிற்சி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கோடைக் கால பயிற்சி முகாம்

    By DIN  |   Published on : 19th April 2017 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனிதவள் மேம்பாட்டு மையத்தின் சார்பில் பெண்கள், ஆண்களுக்கான கோடைக்கால சுயதொழில் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
    குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள இம்மையத்தில், பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து சுயதொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
    தற்போது கோடைக்காலத்தை முன்னிட்டு பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல், அழகுக்கலை, வீட்டு மின்சாதனப் பொருள்கள் பழுதுபார்த்தல் ஆகிய பிரிவுகளிலும், ஆண்களுக்கு, பிளம்பிக், ஒயரிங் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இப்பயிற்சிகள் ஏப்ரல் 25 முதல் தொடங்க உள்ளன.
    இதில் சேர விரும்புவோர் இரண்டு பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படங்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டைப் பிரதிகளுடன் மையத்தின் இயக்குநர் சகாதேவனை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8122322381 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai