Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் 2 தனியார் மதுக் கூடங்களுக்கு "சீல்'- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியில் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டுவந்த  2 தனியார் மதுக் கூடங்களுக்கு கலால் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்துள்ளனர்.
    உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பொள்ளாச்சி நகரப் பகுதியில் செயல்பட்டுவந்த அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. ஆனால், பேருந்து நிலையம் அருகே, சல்டானா வீதியிலும், மீன்கரை சாலை அருகே, ராஜா மில் சாலையிலும் தனியாருக்குச் சொந்தமான 2 மதுக்கூடங்கள் மூடப்படாமல் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டுவந்துள்ளன. அவற்றை மூடக் கோரி மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
    இதையடுத்து, கோட்டக் கலால் துறை அதிகாரி ரத்தினம் தலைமையிலான அதிகாரிகள்  இரண்டு மதுக்கூடங்களையும் செவ்வாய்க்கிழமை பூட்டி "சீல்' வைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai