Enable Javscript for better performance
மதுக் கடைகளை மூடக் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகரில் உள்ள மதுக் கடைகளை அகற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
    கோவை மாநகரில் உள்ள மதுக் கடைகளை அகற்றக்கோரி, பாஜகவினர் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், செட்டி வீதி, ஆவாரம்பாளையம், சங்கனூர் சாலை, கணபதி, சிவானந்தா காலனி, சௌரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உள்பட 180 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அனைவரையும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
      இதே கோரிக்கையை வலியுறுத்தி காரமடை, துடியலூர், கோவில்பாளையம், அன்னூர், சூலூர் உள்ளிட்ட 8 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 320 பாஜகவினரை போலீஸார் கைது
    செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai