Enable Javscript for better performance
மனைவியைக் கொலை செய்த வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    மனைவியைக் கொலை செய்த வழக்கு: கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

    By DIN  |   Published on : 19th April 2017 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி அருகே மனைவியைக் கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு கோவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  
    மதுரை மாவட்டம், வாடிபட்டி வட்டம், மேலநாட்சிகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (41). இவரது மனைவி சாந்தி (38). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் பொள்ளாச்சியை அடுத்த கோமங்கலம்புதூரில் தங்கி இருவரும் கட்டட வேலை செய்து வந்தனர். அப்போது, சாந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கண்ணன் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம். இதனால், சாந்தி கோபித்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று விட்டார். இதன் பிறகு, தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
    இந்தப் புகாரின்பேரில், காவல் துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து. மனைவியுடன் சண்டையிடாமல் சேர்ந்து வாழ்வதாகத் தெரிவித்து இருவரும் மீண்டும் கோமங்கலம்புதூர் வந்துள்ளனர்.
    சில நாள்கள் கழித்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சாந்தியைக் கொலை செய்து சடலத்தை கண்ணன் கிணற்றில் வீசியுள்ளார்.
    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், கண்ணனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக் கட்ட செவ்வாய்க்கிழமை விசாரணை நிறைவடைந்தது. அதில், கண்ணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி ஆர்.பொங்கியப்பன் தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai