Enable Javscript for better performance
வாகனங்களுக்கும் வாரிசுதாரர் முறையை அமல்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம்: நுகர்வோர் அமைப்பு வலியுறு- Dinamani

சுடச்சுட

    

    வாகனங்களுக்கும் வாரிசுதாரர் முறையை அமல்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம்: நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 19th April 2017 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சொத்துகள், வங்கிக் கணக்கு, காப்பீடு போன்றவற்றுக்கு கடைப்பிடிப்பதைப் போன்று வாரிசுதாரர் (நாமினி) முறையை அமல்படுத்தும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கோவை கன்ஸ்யூமர் காஸஸ் என்ற நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் கே.கதிர்மதியோன், பிரதமருக்கு அனுப்பியுள்ள மனு:
    வங்கிக் கணக்குகள், சொத்துகள், காப்பீட்டுத் திட்டங்களில் பயனாளிக்குப் பிறகு அதை உரிமை கொண்டாட வாரிசுதாரர் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டத்தில் அதுபோன்று வாரிசுதாரர் முறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒரு மோட்டார் வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதை பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் முறைப்படி 30 நாள்களுக்குள் பதிவுத் துறைக்கு அந்த விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
    இதைத் தொடர்ந்து, இறந்துபோனவரின் விவரங்களையும், இனி அந்த வாகனத்தை பயன்படுத்துபவரின் விவரங்களையும் குறிப்பிட்டு உரிய சான்றுகளுடன் மனு செய்து தங்களது பதிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.
    ஆனால், தற்போது பெரும்பாலானவர்கள் இறந்தவர்களின் பெயரில் இருக்கும் வாகனங்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அப்படியான வாகனங்களின் காப்பீடைப் புதுப்பிக்க முடியாது. இதனால் விபத்துகளில் சிக்கும்போது, பாதிக்கப்படும் நபருக்கு காப்பீடு (3-வது நபர் காப்பீடு) பலன்கள் கிடைக்காமல் போகும் வாய்ப்பு உள்ளது.
    எனவே, வாகனங்களுக்கு வாரிசுதாரரை நியமிப்பதை கட்டாயமாக்கி மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்படி செய்யும்போது உரிமையாளர் இறக்கும்பட்சத்தில் வாரிசுதாரர் அந்த வாகனத்துக்கு உரிமை கொண்டாடுவது, விபத்தில் பாதிக்கப்படுபவருக்கும் இழப்பீடு கிடைப்பது போன்றவை எளிதாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai