Enable Javscript for better performance
வால்பாறையில் கோடை விழா நடத்தக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வால்பாறையில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறுவருவது வழக்கம். கடந்த ஆண்டு மே மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றதால் கோடை விழா கொண்டாடப்படவில்லை.
    இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழா மே மாதத்தின் துவக்கத்திலேயே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
    இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து மலைப் பகுதிகளிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai