Enable Javscript for better performance
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அலுமினிய மறுசுழற்சி மையம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அலுமினிய மறுசுழற்சி மையம் தொடக்கம்

    By DIN  |   Published on : 19th April 2017 08:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டமலைப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அலுமினிய மறுசுழற்சி மைய தொடக்கவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
    இக்கல்லூரியின் இயந்திரவியல் துறை சார்பில் தொழிற்கூடங்களின் பயன்பாட்டுக்காக அலுமினிய கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    இந்த ஆராய்ச்சிப் பணிக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் மூலமாகத் தொழில்நுட்பப் புத்துருவாக்க திட்டத்தின் கீழ் ரூ. 1.18 கோடி நிதி உதவி அளித்துள்ளது.
    திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து செயல்பட உள்ள இம்மையத்தின் தொடக்க விழாவுக்கு எஸ்.என்.ஆர்.அறக்கட்டளையின் முதன்மைச் செயல் அதிகாரி ராமகிருஷ்ணா தலைமை வகித்தார். கல்லூரியின் கல்வித் துறை இயக்குநர் எ.எபிநேசர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். துறைத் தலைவர் பி.கருப்புசாமி மையத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் குழுமத் தலைவர் கே.ராமசாமி பங்கேற்று மையத்தை திறந்து வைத்துப் பேசினார். இவ்விழாவில் கொடிசியா தலைவர் வி.சுந்தரம், துணைத் தலைவர் வி.திருஞானம், ரூட்ஸ் காஸ்ட் இயக்குநர் ஓ.ஏ.பாலசுப்ரமணியம், கொடிசியா முன்னாள் தலைவர் தேவராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கல்லூரி முதல்வர் என்.ஆர்.அலமேலு நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai