Enable Javscript for better performance
20 ஆண்டுகளுக்குப் பிறகு சோலையாறு அணையில் பராமரிப்புப் பணிகள்- Dinamani

சுடச்சுட

    

    20 ஆண்டுகளுக்குப் பிறகு சோலையாறு அணையில் பராமரிப்புப் பணிகள்

    By DIN  |   Published on : 19th April 2017 08:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்துக்கு உள்பட்ட (பிஏபி) சோலையாறு அணையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 2.5 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    வால்பாறை அருகே உள்ள சோலையாறு அணை ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய கல் அணை, அதிக நீர்ப் பிடிப்பு பகுதியைக் கொண்ட அணையாகும்.
    பிஏபி திட்டத்தின் முக்கிய அணையாக கருதப்படும் இந்த அணையில் இருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    இந்த அணையின் பராமரிப்புப் பணிகள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. உலக வங்கியின் நிதி உதவியோடு சோலையாறு அணை ரூ. 16 கோடி மதிப்பிலும், நீராறு அணை ரூ. 3 கோடியே 15 லட்சம் மதிப்பிலும், சின்னக்கல்லாறு அணை ரூ. 2 கோடியே 51 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் ரூ. 21 கோடியே 66 லட்சம் மதிப்பில் இந்த அணைகளில் உள்ள பழுதுகள், மதகுகள், சுரங்கப் பாதைகள், மின் நிலையங்களுக்குத் தண்ணீர் செல்லும் பாதைகள் ஆகியவற்றில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    மேலும், சோலையாறு அணையை ஒட்டியுள்ள பழுதடைந்த பூங்காவில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai