Enable Javscript for better performance
கேரளத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசியை உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கோவை, மதுக்கரையை அடுத்த வலுக்குப்பாறை அருகே கேரளத்துக்கு இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்துவதாக  உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்படி, அங்கு சென்ற உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்தி நிறுத்தினர்.
    இருசக்கர வாகனத்தில் நபர் ரேஷன் அரிசியுடன் வாகனத்தைப் போட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தையும், 250 கிலோ ரேஷன் அரிசியையும் போலீஸார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai