Enable Javscript for better performance
செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கிய 100 பேருக்கு அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கிய 100 பேருக்கு அபராதம்

    By DIN  |   Published on : 20th April 2017 06:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகரில் செல்லிடப்பேசியில் பேசியபடி, வாகனத்தை இயக்கிய 100 பேருக்கு தலா ரூ. 1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    கோவை மாநகரில் நிகழும் சாலை விபத்துகளைத் தடுக்க போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வாரம் ஒரு திட்டம் என்பதன் பேரில், கடுமையான வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதன்படி, செல்லிடப்பேசியில் பேசியபடி, வாகனத்தை இயக்கினால் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று காவல் துறையினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
    அதன்படி, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை பிற்பகல் வரை நடத்தப்பட்ட சோதனையில் செல்லிடப்பேசியில் பேசியபடி, வாகனத்தை இயக்கிய 100 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தலா ரூ. 1,000 வீதம் ரூ. 1 லட்சம்  அபராதம் வசூலிக்கப்பட்டதாக மாநகரப் போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.சரவணன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai