Enable Javscript for better performance
தமிழக அதிகாரிகள் மீதான வழக்கை கேரள போலீஸார் திரும்பப் பெற வேண்டும்: பெரியார் திராவிடர் கழகம் வலியுறு- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அதிகாரிகள் மீதான வழக்கை கேரள போலீஸார் திரும்பப் பெற வேண்டும்: பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 20th April 2017 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீதான வழக்கை கேரள போலீஸார் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்துள்ளனர்.
     தமிழக பொதுப் பணித் துறை அதிகாரிகள் மீது கேரள மாநிலம், பரம்பிக்குளம் போலீஸார், கொலை மிரட்டல், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     இந்த வழக்கை திரும்பப் பெறுவது குறித்து தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்ற சமாதானப் பேச்சுவார்த்தை பொள்ளாச்சி சார்-ஆட்சியர் காயத்ரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதில், கேரள போலீஸார், வழக்குப் பதிவை திரும்பப் பெறுவது குறித்து கேரள அரசுதான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
      இந்நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தினர், திராவிட விடுதலைக் கழகத்தினர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொள்ளாச்சியில் உள்ள கேரள, பரம்பிக்குளம் மாவட்ட வனத் துறையின் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்களிடம் பொள்ளாச்சி போலீஸார், முற்றுகைப் போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர். அதையடுத்துப் போராட்டம் கைவிடப்பட்டது.
     போராட்டத்தில் ஈடுபட சென்ற பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்டோர் பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுத்தனர். அந்த மனுவில், தமிழக அதிகாரிகள் மீதான வழக்கை ஒரு வாரத்துக்குள் கேரள போலீஸார் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், பரம்பிக்குளம் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai