Enable Javscript for better performance
நிதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் இரண்டு கிளை அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    கோவை, கணபதி, 100 அடி சாலை, டவுன்ஹால், ஆர்.எஸ்.புரம் என நான்கு இடங்களில் தனியார் நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான கிளை அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், கணபதி, 100 அடி சாலை ஆகிய இரு அலுவலகங்களில் காலை 6 மணி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் 12 பேர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிதி நிறுவனம் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai