Enable Javscript for better performance
நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை குறித்து நாளை பயிலரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை குறித்து நாளை பயிலரங்கம்

    By DIN  |   Published on : 20th April 2017 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை குறித்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) பயிலரங்கம் நடைபெறுகிறது.
    இதுகுறித்து அந்த மருத்துவமனையின் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை துறை இயக்குநர் டாக்டர் பரணிதரன் கூறியதாவது:
    உலக அளவில் புற்றுநோய் பாதிப்பால் அதிக ஆண்கள் இறக்கின்றனர். நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்தால், அதை உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். நுரையீரல் புற்றுநோய் தவிர நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நுரையீரல் சுருக்கம், ஆஸ்துமா, சிஓபிடி போன்ற நோய்களையும் ஆரம்ப நிலையில் கண்டறிவதன் மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும்.
    நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்டர்வென்ஷனல் பல்மனாலஜி என்பது நவீன சிகிச்சை முறையாகத் திகழ்ந்து வருகிறது. அறுவை சிகிச்சையின்றி நோயைக் கண்டறிவதற்கான மருத்துவ சாதனத்தை நோயாளியின் உடலில் குறைந்த அளவில் உட்செலுத்தி நுரையீரல் நோய்களைக் கண்டறியலாம். எனவே, இச்சிகிச்சை முறை குறித்து மருத்துவர்கள், மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) பயிலரங்கம் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai