Enable Javscript for better performance
வெள்ளை வெளிச்சத்தில் உள்ளம் மகிழ்ந்த மக்கள்!- Dinamani

சுடச்சுட

    

    தினமணி சார்பில் இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் வெள்ளை வெளிச்சம் என்ற தலைப்பில் வள்ளலாரைப் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து உரையாற்றிய நிகழ்வு கோவையில் புதன்கிழமை நடைபெற்றது.
    தினமணி சார்பில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது என்ற அறிவிப்பு வெளியானது முதலே வள்ளலார் சார்ந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கங்கள், தமிழ்ச் சங்கங்கள், தமிழ் ஆர்வலர்கள், வெற்றித் தமிழர் பேரவையினர் உள்ளிட்டோர் மத்தியில் பெரும் வரவேற்பும், எதிர்பார்ப்பும் உண்டானது. அதற்கேற்ப நிகழ்வு தொடங்குவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே கோவை கொடிசியா அரங்கில் பொதுமக்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேரம் செல்லச்செல்ல அரங்கம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  வள்ளலாரின் வெள்ளை வெளிச்சத்தில் நனைய வந்த அனைவரும் அரங்கின் நுழைவாயில் முன்பிருந்து இன்முகத்துடன் அழைத்துச் செல்லப்பட்டு, இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர். பாரம்பரியமிக்க தினமணி சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்வில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் சன்மார்க்க சங்கத்தினர், தமிழ் ஆர்வலர்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
      இதில்,  ஊரன் அடிகள், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், சக்தி குழும நிர்வாக இயக்குநர் ஹரிஹரசுதன், குமரகுரு கல்விக் குழுமத் தலைவர் சங்கர் வாணவராயர், பிபிஜி கல்விக் குழுமத் தலைவரான மருத்துவர் எல்.பி.தங்கவேலு,
    கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், கவிஞர் கவிதாசன், செந்தில் குழுமத் தலைவர் ஓ.ஆறுமுகசாமி, ஈரோடு மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவர் நாகலிங்கம், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சக்திவேல், ஓம்சக்தி இதழின் இணை ஆசிரியர் பெ.சிதம்பரநாதன், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், கங்கா மருத்துவமனைத் தலைவரான மருத்துவர் சண்முகநாதன், கோவை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவர் ராமநாதன், திருப்பூர் ஜீவானந்தம், பேரூர் தமிழ்ச் சங்க நிர்வாகி ரவி உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
     மேலும், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

    கெளரவிப்பு...
     "வெள்ளை வெளிச்சம்' உரை நிகழ்வில், வடலூர் ஊரன் அடிகள், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் எம்.கிருஷ்ணன், சக்தி குழும நிர்வாக இயக்குநர் ஹரிஹரசுதன் ஆகியோருக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் நினைவுப் பரிசு வழங்கினார்.
     அதைத் தொடர்ந்து, வெற்றித் தமிழர் பேரவை, கொடிசியா, கோவை மாவட்ட சன்மார்க்க சங்கம், சத்தியமங்கலம் கிராண்ட் பள்ளி, தாய்த் தமிழ் பள்ளி, பேரூர் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி சன்மார்க்க சங்கம், கோவை பிரம்மகுமாரிகள் அமைப்பு, சேலம் மாவட்ட சன்மார்க்க சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர், கவிஞர் வைரமுத்து, தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் ஆகியோரைப் பாராட்டி கௌரவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai