Enable Javscript for better performance
இடஒதுக்கீடு ரத்து: பணியைப் புறக்கணித்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இடஒதுக்கீடு ரத்து: பணியைப் புறக்கணித்து அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 21st April 2017 07:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து கோவை அரசு மருத்துவர்கள் 2 மணி நேரம் பணியைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் மருத்துவர்கள் வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai