ஏப்ரல் 23-இல் எழுத்தாளர் ஆயிஷா நடராஜனுடன் சந்திப்பு நிகழ்ச்சி
By DIN | Published on : 21st April 2017 07:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடராஜனுடன் வாசகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது.
உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளையொட்டி, தமிழக அறிவியல் இயக்கம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 23-ஆம் தேதி உலகப் புத்தகத் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ ஆலய அரங்கில் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். மேலும், அவர் வாசகர்களையும் சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து, சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுகிறது.
இதில், மேட்டுப்பாளையம் வட்டாரப் பள்ளிகளிலிருந்து துளிர் அறிவியல் திறனாய்வுத் தேர்வில் முதலிடம் பெற்ற இளநிலை, முதுநிலை மாணவர்களில் தலா ஒருவருக்கும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவருக்கும், அறிவியல் இயக்கம் சார்பில் திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்துக்குச் சென்று வந்த ஆசிரியர், மாணவருக்கும், பொதுத் தேர்வுகளில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுத் தந்த ஆசிரியர்க ளுக்கும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேட்டுப்பாளையம் கிளைத் தலைவர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.