Enable Javscript for better performance
ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: கோவை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்- Dinamani

சுடச்சுட

    

    ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு: கோவை மாவட்டத்தில் 25 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

    By DIN  |   Published on : 21st April 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆசிரியர் தேர்வு வாரியம் வரும் 29, 30-ஆம் தேதிகளில் நடத்த உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுகளை, கோவையில் 25,575 பேர் எழுதுகின்றனர்.
    தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 29-ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு ஏப்ரல் 30-ஆம் தேதியும் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
    இதையடுத்து, கோவை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 25,575 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி, கோவை கல்வி மாவட்டத்தில் தாள் -1 தேர்வை 12 தேர்வு மையங்களில் 5,893 பேர் எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 7,943 பேர் எழுதுகின்றனர்.
    கோவை கல்வி மாவட்டத்தில் தாள் -1 தேர்வுக்கு, பிரசன்டேஷன் கான்வென்ட் பள்ளி, கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளி, ஜி.ஆர்.ஜி. மெட்ரிக் பள்ளி, நேஷனல் மாடல் பள்ளி, துணி வணிகர் சங்கப் பள்ளி, புனித மரியன்னை மகளிர் பள்ளி, புனித ஜோசப் மெட்ரிக் பள்ளி, வெங்கடலட்சுமி மெட்ரிக் பள்ளி, சி.எம்.எஸ். மெட்ரிக் பள்ளி, ஒண்டிப்புதூர் ஆண்கள் பள்ளி, எஸ்.பி. கிக்கானி பள்ளி, பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளி ஆகிய மையங்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ருக்மணியம்மாள் மேல்நிலைப் பள்ளி, பாரத் வித்யா நிகேதன், நகராட்சி பெண்கள் பள்ளி, நகராட்சி ஆண்கள் பள்ளி, மாரியம்மாள் பெண்கள் பள்ளி ஆகிய பள்ளிகளும் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
    அதேபோல், கோவையில் தாள்-2 தேர்வை 27 தேர்வு மையங்களில் 13,631 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்கு, அசோகபுரம் அரசுப் பள்ளி, பிரசன்டேஷன் கான்வென்ட், கிருஷ்ணம்மாள் மகளிர் பள்ளி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி ஆண்கள் பள்ளி, அல்வேர்னியா மெட்ரிக், ஜி.ஆர்.ஜி. மெட்ரிக், எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரியக், ஸ்ரீ செளடேஸ்வரி வித்யாலயா, நேஷன் மாடல், துணி வணிகர் சங்கப் பள்ளி, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித மரியன்னை மகளிர் பள்ளி, தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளி, கார்மல் கார்டன், வாசவி வித்யாலயா, புனித ஜோசப், வெங்கடலட்சுமி மெட்ரிக், சி.எம்.எஸ். மெட்ரிக், அவிலா கான்வென்ட், விமல்ஜோதி கான்வென்ட், ஒண்டிப்புதூர் ஆண்கள் பள்ளி, ஆர்.சி. அரசு மகளிர் பள்ளி, கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, சபர்பன் மேல்நிலைப் பள்ளி, எஸ்.பி. கிக்கானி மேல்நிலைப் பள்ளி, பி.எஸ்.ஜி. சர்வஜன பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 4,001 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு, ருக்மணியம்மாள் மேல்நிலைப் பள்ளி, பாரத் வித்யா நிகேதன், எல்.எம்.எஸ். மெட்ரிக், ஆரோக்கிய மாதா, நகராட்சி பெண்கள் பள்ளி, நகராட்சி ஆண்கள் பள்ளி, பழனிக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மாள் பெண்கள் பள்ளி, ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
    முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை: தேர்வு எழுத உள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும். 9.30 மணி வரை தேர்வு மைய நுழைவாயிலில் சோதனை நடைபெறும். தேர்வு அறைக்குள் நுழைவுச் சீட்டு, பேனா ஆகியவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
    தேர்வு நடைபெறும்போது, யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை. தேர்வு முடிந்த பிறகு விடைத்தாளின் பிரதியைப் பெற்றுச் செல்லலாம். செல்லிடப்பேசி, மடிக்கணினி, கணக்கிடும் கருவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களுக்குத் தேர்வு வாரியத்தின் தேர்வுகளைத் தொடர்ந்து எழுத நிரந்தரத் தடை விதிக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அருள்முருகன் எச்சரித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai