Enable Javscript for better performance
குடிநீர் கோரி பொதுமக்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட காரேகவுண்டம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் விநியோகிக்க கோரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    காரேகவுண்டம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பாலாஜி நகரில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு 18 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே பவானி ஆற்றுக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்குள்ள 6 ஆழ்துளைக் கிணறுகளும் நீரின்றி வறண்டு 2 மாதங்களாகிறதாம். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடமும் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
    இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai