Enable Javscript for better performance
கோவையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 21) நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து ஆட்சியர் த.ந.ஹரிஹரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகத் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலை அளிப்போர், வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை நடைபெறும்.
    இந்த முகாமில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம். இதில் பிட்டர், டர்னர், கணினி இயக்குபவர், டெய்லர், டேட்டா என்டரி ஆபரேட்டர் போன்ற தொழில் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம்.
    இந்த முகாமில் தனியார் துறையில் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் பங்கேற்க எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. தேர்வு செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai