Enable Javscript for better performance
தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கார், நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், காரை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
    கோவை, போத்தனூர் கருப்பராயன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஆலம் (43). இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த 16-ஆம் தேதி வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியே சென்றிருந்தார்.
    இந்நிலையில், புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் நகை, ரூ. 36 ஆயிரம், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.  மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  இதுகுறித்து போத்தனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai