Enable Javscript for better performance
பாரதியார்-ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து- Dinamani

சுடச்சுட

    

    பாரதியார்-ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

    By DIN  |   Published on : 21st April 2017 07:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆராய்ச்சி, கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக கோவை பாரதியார்-தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
    பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை, ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழத்தின் லேசர் ஆராய்ச்சி துறை இடையே ஏற்பட்டுள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் கூறப்படுவதாவது:
    இந்த ஒப்பந்தம் இருநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையே கல்வி, ஆராய்ச்சி தொடர்பான புரிந்துணர்வை ஏற்படுத்துதல், அறிவுசார் ஒத்துழைப்பு, தொலைநோக்குப் பார்வையுடன் புதிய ஆய்வுத் திட்டங்களை உருவாக்குதல், தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும் பொருட்டு, உள்ளார்ந்த நட்புணர்வுடன்
    கூடிய ஒத்துழைப்பை நல்குதல், ஆதரவை மேம்படுத்துதல், இருநாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் தங்களின் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்றவற்றுக்கு வழிவகை செய்யும்.
    ஆராய்ச்சி மாணவர்களின் முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் விதமாக, இருநாட்டு ஆராய்ச்சி மாணவர்களை பரிமாறிக் கொள்ளவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    மேலும், முதுநிலை அறிவியல் மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை மேம்படுத்தும் விதமாக புதிய வகை ஆய்வுகளை வலுப்படுத்தவும், இரு பல்கலைக்கழங்களும் இணைந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், சர்வதேச அளவிலான ஆராய்ச்சி மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தவும் இந்த ஒப்பந்தம் வாய்ப்புகளை உருவாக்கும்.
    இந்த ஒப்பந்தத்தை, தாவரவியல் துறைப் பேராசிரியர் த.பரிமேலழகன், லேசர் ஆராய்ச்சியாளர் ஹெய்டி.ஆப்ரஹாம்ஸ் ஆகியோர் இணைத்து முன்னெடுத்து சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து மார்பகப் புற்றுநோய் தொடர்பான கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
    இந்த ஒப்பந்தத்தில், பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ப.வனிதா, ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவ அறிவியல் துறையின் முதல்வர் ஆண்ட்ரு ஸ்வார்ட் ஆகியோர் கையொப்பமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai