Enable Javscript for better performance
பெண்களிடம் 11 பவுன் நகைப் பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் 11 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    கோவை சிட்ரா சந்திப்பு அருகே உள்ள அழகு நகர் 2-ஆவது வீதியைச் சேர்ந்தவர் அரவணன். இவரது மனைவி சண்முகலட்சுமி (54). இவர்,  கோயிலுக்குச் சென்று விட்டு புதன்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சண்முகலட்சுமி அணிந்து இருந்த 6 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.
    பாப்பநாயக்கன்பாளையத்தில் சாலையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai