Enable Javscript for better performance
ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு ஜயந்தி: நாளை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ உபகலையார் ராமானுஜர் கூடத்தில் ஸ்ரீ எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில் சனிக்கிழமை (ஏப்ரல் 22) முதல் மே 1 வரை ராமானுஜரின் 1000-ஆவது ஜயந்தி நடைபெறுகிறது.
    இந்த விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, நாள்தோறும் ராமானுஜர் மங்களகிரி வாகனம், சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, தோளுக்கு இனியான், சேஷ வாகனம், பல்லக்கு சேவை, சாதா சப்பரம், அலங்கார சப்பரம், ஆச்சாரிய விமானத்தில் புறப்பாடு, புஷ்பப் பல்லக்கு ஆகிய சிறப்பு அலங்காரங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது.
    நாள்தோறும் காலை 10 மணி அளவில் நாலாயிர திவ்யப் பிரபந்த சாற்றுமுறை நடைபெறுகிறது. ராமானுஜரின் திருநட்சத்திர திருநாளான மே 1-இல் கந்தப்பொடி உற்சவம், நெய்தீப ஊர்வலத்துடன் விழா நிறைவுறுகிறது. நாள்தோறும் மாலை நேரங்களில் கணபதி, பூச்சக்கரக்குடை கோஷ்டி, நெ.24.வீரபாண்டி கிருஷ்ண லீலா பிருந்தாவன கோஷ்டி, குனியமுத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் பஜனை கோஷ்டி, சின்னமேட்டுப்பாளையம் ஹரிநாம பஜனை கோஷ்டி, நாயக்கனூர் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோஷ்டி, திருமலைநாயக்கன்பாளையம் கரிவரதராஜப் பெருமாள் பஜனை கோஷ்டி, காரமடை ராமானுஜதாசர்கள் பஜனை கோஷ்டி, பழையபுதூர் ஆதிமூர்த்தி பெருமாள் பஜனை கோஷ்டி, காரமடை, சீனிவாசப் பெருமாள் பஜனை கோஷ்டி ஆகிய குழுக்களின் நாமசங்கீர்த்தன வைபவங்கள் நடைபெறவுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai