Enable Javscript for better performance
2.35 லட்சம் காகிதக் கோப்பைகளில் அப்துல் கலாம் உருவப்படம்: தனியார் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற- Dinamani

சுடச்சுட

    

    2.35 லட்சம் காகிதக் கோப்பைகளில் அப்துல் கலாம் உருவப்படம்: தனியார் பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி

    By DIN  |   Published on : 21st April 2017 07:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை கேம்போர்டு பள்ளி மாணவ, மாணவிகள் 2.35 லட்சம் காகிதக் கோப்பைகளைக் கொண்டு குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் உருவப் படத்தை வடிவமைத்து கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
    கோவை, மணியகாரன்பாளையத்தில் உள்ள கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவிகள் 2.35 லட்சம் காகிதக் கோப்பைகளைக் கொண்டு 10,560 சதுர அடியில் சுமார் 3 மணி நேரத்தில் அப்துல் கலாமின் உருவப் படத்தை வடிவமைத்தனர்.
    இதற்கு முன்னதாக, லக்னெளவில் கடந்த ஆண்டு 1.40 லட்சம் காகிதக் கோப்பைகளைக் கொண்டு 627 சதுர அடியில் 4.15 மணி நேரத்தில் வோடபோஃன் நிறுவனத்தின் சின்னம் வடிவமைக்கப்பட்டதே சாதனையாக இருந்தது. கின்னஸ் சாதனைக்கான வழிகாட்டுதல்களின்படி, சாட்சிகள், பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் விடியோ தொகுப்புகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளைப் பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை, முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டினர். இதே பள்ளி மாணவ, மாணவிகள் புலிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக 2013-இல் 35 ஆயிரம் தபால் அட்டைகளைக் கொண்டு 4,880 சதுர அடியில் வங்கப் புலியின் தலையை வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai