Enable Javscript for better performance
அன்னூர் அருகே மது பாட்டில்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் அருகே தனியாருக்குச் சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை மதுவிலக்கு காவல் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     கருமத்தம்பட்டி மதுவிலக்கு காவல் துறையினர், அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையம் பகுதியில் தர்மராஜ் என்பவருக்குச் சொந்தமான குடோனில் திடீரென வியாழக்கிழமை சோதனையிட்டனர். அங்கு, புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 8,400 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், மனோஜ் (20), சுப்பிரமணியம் (28) ஆகிய இருவரைக் கைது செய்து, மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குடோன் உரிமையாளரான தர்மராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
     தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக் கடைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், அன்னூர் பகுதிகளைச் சேர்ந்த சிலர், அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து மது பாட்டில்களைக் கடத்தி வந்து, அதில் கலப்படம் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து மதுவிலக்கு காவல் துறையினருக்கும், உள்ளூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தால் பெயரளவுக்கு சோதனையிட்டு, வழக்குப் பதிவு செய்வதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  இத்தகைய கலப்பட மதுபானங்களை அருந்தி உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai