Enable Javscript for better performance
இடியுடன் மழை: மின்சாதனப் பொருள்கள் சேதம்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை பகுதியில் ஏற்பட்ட இடியால் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருள்கள் பழுதாகியுள்ளன.
    வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை இரவு லேசான மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த இடி ஏற்பட்டது. இடி, தொடர்ந்து
    10 நிமிடம் நீடித்தது. இதனால் மின்விநியோகமும் துண்டிப்படைந்தது. இந்நிலையில், வால்பாறையின் பல்வேறு பகுதிகளில் சில மரங்களில் இடி விழுந்து, இரண்டாக பிளந்துதிருப்பது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
    இதேபோல், பல்வேறு வீடுகளில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகள், தொலைபேசிக் கருவிகள், மின் விசிறிகள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு மற்றும் மின்சாதனப் பொருள்கள் பழுதடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai