Enable Javscript for better performance
இரு சிறுமிகளைக் கடத்தியதாக அஸ்ஸாம் இளைஞர்கள் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    இரு சிறுமிகளைக் கடத்தியதாக அஸ்ஸாம் இளைஞர்கள் மீது வழக்கு

    By DIN  |   Published on : 22nd April 2017 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூரில், 17 வயதான 2 சிறுமிகளைக் கடத்திச் சென்றதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
     அன்னூர்-தென்னம்பாளையம் சாலையில் வசிக்கும், 17 வயதுள்ள 2 சிறுமிகள் பதுவம்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்தனர். இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி வேலைக்குச் சென்ற இவர்கள் இருவரும் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.
     இந்நிலையில், அதே நிறுவனத்தில் வேலை செய்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த போனாமாலி சாகியா, பப்லு ஆல்வா ஆகிய இரு இளைஞர்கள் அந்தச் சிறுமிகளைக் கடத்திச் சென்றுள்ளதாகத் தெரிகிறது.
     இதுகுறித்த புகாரின்பேரில் அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai