Enable Javscript for better performance
"ஏப்ரல் 25 போராட்டத்துக்கு ஆதரவாக 10 ஆயிரம் உணவகங்கள் அடைக்கப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    "ஏப்ரல் 25 போராட்டத்துக்கு ஆதரவாக 10 ஆயிரம் உணவகங்கள் அடைக்கப்படும்'

    By DIN  |   Published on : 22nd April 2017 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் உணவகங்கள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளார்.
      இது குறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்துக்கு தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்து, சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 10 ஆயிரம் பேருக்குச் சொந்தமான உணவகங்கள் அடைக்கப்படும்.
     விவசாயிகள் நடத்தும் போராட்ட முறைகளில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதே நேரத்தில் விவசாயிகள் இல்லை என்றால் உணவகங்கள் செயல்பட முடியாது. விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அதிகப்படியான தடுப்பணைகள் அமைக்கவும், விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் ஒரு சில விதிகளைத் தவிர, அது வரவேற்கக் கூடியதாகவே அமைந்துள்ளது என்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai