Enable Javscript for better performance
குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் ஒன்றியம், காட்டம்பட்டி ஊராட்சியில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
     காட்டம்பட்டி ஊராட்சியில் ஆழ்துளைக் கிணற்றுத் தண்ணீர் பல நாள்களாக விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்திலும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
     இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் காட்டம்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், அன்னூர் காவல் துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையோரத்தில் அவர்களை அமர வைத்தனர். இதையடுத்து அங்கு வந்த, வட்டார வளர்ச்சி அலுவலர் இளவரசு, ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தனியாகக் குழாய் அமைக்கும் பணியை மேற்கொண்டார். இதில், சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இப்போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai