குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
By DIN | Published on : 22nd April 2017 07:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் வேலை செய்துவந்த குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பிச்சை எடுத்தவர்கள் என மொத்தம் 75 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை மீட்டனர்.
கோவை மாநகரில் உள்ள பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், நகைப் பட்டறைகளில் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, கோவை மாநகரப் பகுதிகளில் காவல் துறையினர் வெள்ளிக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையின்போது, பல்வேறு பகுதிகளில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த 70 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்டனர். மேலும், பிச்சை எடுத்துக்கொண்டிருந்த 5 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் உக்கடம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் கல்வி கற்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.