Enable Javscript for better performance
கேரளத்துக்கு மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்; 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு மணல் கடத்தல்: 3 லாரிகள் பறிமுதல்; 3 பேர் கைது

    By DIN  |   Published on : 22nd April 2017 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளை கிணத்துக்கடவு காவல் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
    கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் திருமேனி தலைமையிலான காவல் துறையினர் தமிழக - கேரள எல்லையான பெரும்பதி பிரிவு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தியபோது அதன் ஓட்டுநர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர்.
    காவல் துறையினர் அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
    லாரியை சோதனையிட்டபோது, ஒவ்வொரு லாரியிலும் தலா 3 யூனிட் வீதம் மொத்தம் 9 யூனிட் மணல் இருந்துள்ளது. அதை திருச்சியில் இருந்து கேரளத்துக்கு கடத்துவதும் தெரியவந்தது.
    இதையடுத்து, லாரி ஓட்டுநர்களான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் (26), சூளகிரியைச் அடுத்த பீர்பள்ளியைச் சேர்ந்த மதியழகன் (31), தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த ராஜா (29) ஆகியோரைக் கைது செய்தனர். லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
    மேலும், லாரி உரிமையாளர்களான நாமக்கல்லைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி புஷ்பலதா, கரூரைச் சேர்ந்த பிரபு, அதேபகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் இருவர் ஆகியோர் உள்பட 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai