Enable Javscript for better performance
சச்சிதானந்தஜோதி நிகேதன் பள்ளி சார்பில் சமுதாய விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சச்சிதானந்தஜோதி நிகேதன் பள்ளி சார்பில் சமுதாய விழிப்புணர்வுப் பேரணி

    By DIN  |   Published on : 22nd April 2017 07:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையத்தை அடுத்த கல்லாறு சச்சிதானந்தஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் சமுதாய விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மேட்டுப்பாளையம், ஓடந்துறை சோதனைச் சாவடியில் இருந்து தொடங்கிய பேரணிக்கு பள்ளிச் செயலர் கவிஞர் கவிதாசன் தலைமை வகித்தார். காவல் ஆய்வாளர் சுகவனம், பள்ளி துணைச் செயலர் ஞானபண்டிதன், பள்ளியின் முதுநிலை முதல்வர் கணேசன், முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் சிவகுமார் வரவேற்றார்.
    பேரணியை, கோவை ஏர்விங் கமாண்டர் அனில் ஜெ.மாத்யூ தொடக்கி வைத்தார். இதில், 150-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ரத்த தானம், தலைக்கவசம் அணிதல், மரம் வளர்ப்பு உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஓடந்துறையில் தொடங்கிய பேரணி உதகை சாலை, காந்தி மைதானம், பங்களாமேடு வழியாக நகரப் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.
    அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் மின்னணு பணப் பரிமாற்றம், சாலைப் பாதுகாப்பு, தூய்மை இந்தியா, தண்ணீர் சேமிப்பு ஆகியவை குறித்து நாடகம், வில்லுப்பாட்டு மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
    இதில், பள்ளி ஆசிரியர்கள் சக்திவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். தேசிய மாணவர் படை அலுவலர் குமார் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai