சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்
By DIN | Published on : 22nd April 2017 07:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
கோவை, தெலுங்குபாளையத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் சித்தார்த் (21), கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இவர், தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் புறவழிச் சாலையில் வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக சாலைத் தடுப்பில் மோதி பலத்த காயமடைந்தார்.
அந்த வழியாகச் சென்ற நபர், சித்தார்த்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து தனியார் மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆபத்தான நிலையில் அவர் மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனையில் திரண்ட அவரது உறவினர்கள், மருத்துவர்களின் அலைக்கழிப்பு காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறி, வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சடலத்தைப் பெற்றுச் சென்றனர்.